close
Choose your channels
Por
Joshwa

ரஜினி அல்லது சூர்யா நடிக்க வேண்டிய படம்.. கெளதம் மேனன் பகிர்ந்த ஆச்சரிய தகவல்..!

Wednesday, November 15, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல இயக்குனர் கௌதம் மேனன் இயக்கத்தில் உருவான ’துருவ நட்சத்திரம்’ திரைப்படம் வரும் 24ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இந்த படம் ரஜினி அல்லது சூர்யா நடிக்க வேண்டிய படம் என்று கூறியுள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

விக்ரம் நடிப்பில், கௌதம் மேனன் இயக்கத்தில், ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் உருவான திரைப்படம் ’துருவ நட்சத்திரம்’. ஸ்பை திரில்லர் திரைக்கதை அம்சம் கொண்ட இந்த படம் நிச்சயம் வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் சமீபத்தில் பேட்டி அளித்த கௌதம் மேனன் இந்த படத்தின் கதையை முதலில் தான் சூர்யாவிடம் கூறியதாகவும் ஆனால் ஸ்பை த்ரில்லர் படம் தனக்கு செட் ஆகுமா என்ற சந்தேகம் அவருக்கு இருந்த நிலையில் அந்த படத்தில் அவர் நடிக்கவில்லை என்று கூறினார்.

இதனை அடுத்து இந்த படத்தின் கதையை ரஜினியிடம் கூறியதாகவும் அவரது வயது ஏற்ற வகையில் சில மாற்றங்கள் செய்ததாகவும் கூறினார். அவரும் அந்த கதையை விரும்பிய நிலையில் திடீரென அவர் ’கபாலி’ நடிக்க சென்று விட்டதாகவும் கூறினார். இதையடுத்து தான் விக்ரம் இந்த பட த்திற்கு வந்துள்ளார் என்று தெரிவித்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.