close
Choose your channels
NMM
NMM

'நதிகளிலே நீராடும் சூரியன்' கதை என்ன? சிம்பு தான் ஹீரோவா? கெளதம் மேனன் விளக்கம்!

Saturday, September 24, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சிம்பு நடிப்பில் கௌதம் மேனன் இயக்கத்தில் ’நதிகளிலே நீராடும் சூரியன்’ என்ற திரைப்படம் உருவாக இருப்பதாக அறிவிக்கப்பட்டது என்பதும் அந்த படம்தான் பின்னர் ’வெந்து தணிந்தது காடு’ என்று மாற்றப்பட்டதாகவும் ஊடகங்களில் செய்திகள் வெளியானது.

ஆனால் சமீபத்தில் இயக்குனர் கெளதம் மேனன் அளித்த பேட்டியில் ’நதிகளிலே நீராடும் சூரியன்’ படத்தின் கதை வேறு என்றும் ’வெந்து தணிந்தது காடு’ படத்தின் கதை வேறு என்றும் குறிப்பிட்டார். இந்த நிலையில் ’நதிகளிலே நீராடும் சூரியன்’ படத்தின் கதை என்ன என்பதை சமீபத்தில் அளித்த பேட்டியில் அவர் தெரிவித்துள்ளார்.

இது ஒரு முழுக்க முழுக்க ரொமான்ஸ் கதை என்றும் இந்த படத்தில் சிம்பு நடிப்பதாக முடிவு செய்யப்பட்டு ஏஆர் ரகுமான் இசையில் மூன்று பாடல்களும் கம்போஸ் செய்யப்பட்டது என்றும் தெரிவித்தார். ஆனால் ஜெயமோகன் அவர்களிடம் வேறொரு விஷயம் குறித்து பேசிக் கொண்டிருந்தபோதுதான் ’வெந்து தணிந்தது காடு’ படத்தின் கதையை அவர் கூறினார் என்றும், இதனை அடுத்தே ’நதிகளிலே நீராடும் சூரியன்’ படத்திற்கு முன்பாக ’வெந்து தணிந்தது காடு’ திரைப்படத்தை எடுக்க முடிவு செய்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

’வெந்து தணிந்தது காடு’ படத்தில் புதுமுகம் நடித்தால் நன்றாக இருக்கும் என ஜெயமோகன் கூறியதாகவும், ஆனால் அந்த கதைக்கு சிம்பு பொருத்தமாக இருப்பார் என்று அவரிடம் கூறி சிம்புவுக்கு இரண்டு மணி நேரம் இந்த கதையை கூறியவுடன் அவர் உடனே ’வெந்து தணிந்தது காடு’ படத்திற்கு தயாராகி விட்டார் என்றும் அதன்பிறகு இந்த படம் உருவானது என்றும் கூறியுள்ளார்.

இந்த நிலையில் முழுக்க முழுக்க ரொமான்ஸ் கதை அம்சம் கொண்ட ’நதிகளிலே நீராடும் சூரியன்’ திரைப்படத்திலும் சிம்பு நடிப்பார் என்றும் ஏஆர் ரஹ்மான் இசையமைக்கும் இந்தப் படம் விரைவில் உருவாகும் என்றும் கெளதம் மேனன் தெரிவித்துள்ளார். ஏற்கனவே கெளதம் மேனன் தன்னுடைய அடுத்த திரைப்படம் முழுக்க முழுக்க ஒரு ரொமான்ஸ் படம் என்று கூறிய நிலையில் அது 'நதிகளிலே நீராடும் சூரியன்’ படமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.