close
Choose your channels

கொரோனா வைரஸ் போரில் களமிறங்கும் கவுதம் மேனன்!

Tuesday, July 7, 2020 • தமிழ் Comments

கொரோனா வைரஸ்க்கு எதிராக இந்தியாவில் மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வந்தும் தினமும் ஆயிரக்கணக்கானோர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டும், நூற்றுக்கணக்கானோர் கொரோனா வைரசால் பலியாகியும் வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

இந்த நிலையில் கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த பல்வேறு குறும்படங்கள் தமிழ் உள்பட பல இந்திய மொழிகளில் வெளியாகி வருகிறது என்பது தெரிந்ததே. அந்த வகையில் தற்போது பிரபல இயக்குனர் கவுதம் மேனன், கொரோனா வைரஸ் குறித்த டாக்குமெண்டரி படம் ஒன்றை டிஸ்கவரி சேனலுக்காக உருவாக்கி உள்ளார்

"COVID-19: India’s War Against The Virus" என்ற டைட்டிலில் உருவாகியுள்ள இந்த குறும்படம் ஜூலை மாதம் 16ஆம் தேதி இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழில் இயக்குனர் கவுதம் மேனன் இந்த குறும்படத்தை உருவாக்கியுள்ளதை போல், ஹிந்தியில் மனோஜ் பாஜ்பாய் அவர்கள் இயக்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்தியாவில் கொரோனா வைரஸ்க்கு எதிராக எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் மற்றும் மக்களின் ஒத்துழைப்பு, ஊரடங்கால் ஏற்பட்ட பிரச்சனைகள் மற்றும் நன்மைகள் உள்ளிட்ட பல சம்பவங்கள் இந்த குறும்படத்தில் இடம் பெற்றிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

Get Breaking News Alerts From IndiaGlitz