close
Choose your channels
Rocketry
Yaanai

காஜல் அகர்வால் கர்ப்பம் உண்மையா? கணவர் கவுதம் கிட்சலு இன்ஸ்டாகிராம் பதிவு!

Sunday, January 2, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல நடிகை காஜல் அகர்வால் மற்றும் மும்பை தொழிலதிபர் கவுதம் கிட்சலு ஆகிய இருவருக்கும் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் திருமணம் நடந்தது என்பதும் இருவரும் மாலத்தீவுக்கு தேனிலவு சென்றது உள்பட பல சுற்றுப் பயணங்கள் செய்து வந்தார்கள் என்பதையும் ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் காஜல் அகர்வால் கர்ப்பம் அடைந்ததாகவும், இதனை அடுத்து அவர் ’இந்தியன் 2’ உள்பட ஒருசில படங்களில் இருந்து விலகி இருப்பதாகவும் செய்திகள் வெளியானது.

இந்த நிலையில் காஜல் அகர்வால் கர்ப்பம் என்று செய்திகள் வெளியானாலும் அதனை காஜல் அகர்வால் மற்றும் அவரது கணவர் உறுதி செய்யாத நிலையில் சற்று முன் காஜல் அகர்வாலின் கணவர் கவுதம் கிட்சலு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவு செய்துள்ளார்.

அதில் காஜல் அகர்வாலின் புகைப்படத்தை பதிவு செய்து 2022ஆம் ஆண்டில் சந்திப்போம் என குறிப்பிட்டு கர்ப்பமான பெண்மணியின் எமோஜி ஒன்றையும் பதிவு செய்துள்ளார். இதனை அடுத்து காஜல் அகர்வால் கர்ப்பம் என்பதை அவரது கணவர் உறுதி செய்துள்ளதை அடுத்து ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.