close
Choose your channels
sisa

பிரதமர் மோடியுடன் நடிகை கவுதமி திடீர் சந்திப்பு

Saturday, October 29, 2016 • தமிழ் Comments

பிரபல நடிகையும் கமல்ஹாசனின் துணைவியுமான கவுதமி புற்றுநோயில் இருந்து மீண்டு வந்தது மட்டுமின்றி புற்று நோய் விழிப்புணர்வுக்காக பல அரிய சேவைகள் செய்து வருகிறார்.
இந்நிலையில் இன்று நடிகை கவுதமி பாரத பிரதமர் நரேந்திர மோடியை அவரது இல்லத்தில் நேரில் சந்தித்துள்ளார். இந்த சந்திப்பு குறித்து கவுதமி தனது சமூக வலைத்தளத்தில் கூறியபோது, 'பிரதமரை இன்று சந்தித்த அனுபவம் த்ரில்லாக இருந்தது. மேலும் எங்களை போன்ற நட்சத்திரங்கள் பிரதமரை சந்திப்பது எளிதாக உள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.
புற்றுநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சி குறித்து பிரதமரிடம் கவுதமி பேசியிருக்கலாம் என்று கருதப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Get Breaking News Alerts From IndiaGlitz