close
Choose your channels

இன்னும் பத்தே நாட்களில் முடியும் ஜி.வி.பிரகாஷ் படம்

Sunday, July 30, 2017 • தமிழ் Comments

கோலிவுட்திரையுலகில் ஒரே நேரத்தில் அதிக படங்களில் ஹீரோவாக நடித்து கொண்டிருக்கும் நடிகர்கள் விஜய் சேதுபதி மற்றும் ஜி.வி.பிரகாஷ் ஆகிய இருவர் மட்டுமே.

இந்த நிலையில் ஜி.வி.பிரகாஷ் நடித்து கொண்டிருக்கும் படங்களில் ஒன்றான 'குப்பத்து ராஜா' படத்தின் படப்பிடிப்பு சத்தமில்லாமல் வடசென்னை மற்றும் பின்னி மில் ஆகிய பகுதிகளில் விறுவிறுப்புடன் நடைபெற்று வருகிறது. இன்னும் பத்து நாட்களில் இந்த படத்தின் மொத்த படப்பிடிப்பும் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன்பின்னர் போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் தொடங்கப்பட்டு மிக விரைவில் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

ஜி.வி.பிரகாஷ், பார்த்திபன், பாலக் லால்வானி, பூனம் பாஜ்வா, எம்.எஸ்.பாஸ்கர், யோகிபாபு உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்தை பாபா பாஸ்கர் இயக்கி வருகிறார். 'எஸ் ஃபோகஸ்' நிறுவனம் தயாரித்து வரும் இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கின்றார். மகேஷ் முத்துசாமி ஒளிப்பதிவில், பிரவீண் படத்தொகுப்பில் இந்த படம் உருவாகி வருகிறது.

மேலும் 4G, ஐங்கரன், நாச்சியார், செம, 100% காதல், சர்வம் தலமயம்' ஆகிய படங்களில் ஜி.வி.பிரகாஷ் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Get Breaking News Alerts From IndiaGlitz