close
Choose your channels
Viruman
Laal

இன்று முதல் 'யானை' படத்தில் ஏற்பட்ட திடீர் மாற்றம்: ரசிகர்கள் ரியாக்சன் என்ன?

Wednesday, July 6, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

அருண் விஜய் நடிப்பில் ஹரி இயக்கத்தில் உருவான ‘யானை’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பதை ஏற்கனவே பார்த்தோம். கமல்ஹாசனின் ’விக்ரம்’ திரைப்படத்திற்குப் பின்னர் திரையரங்குகளில் நல்ல வசூலை பெற்று தரும் படமாக ‘யானை’ உள்ளது என திரையரங்கு உரிமையாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்களிடம் இருந்து தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த நிலையில் ‘யானை’ திரைப்படத்தின் ரன்னிங் டைம் 2 மணிநேரம் 36 நிமிடங்கள் என இருக்கும் நிலையில் இன்று முதல் இதில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ‘யானை’ திரைப்படத்தின் ஐந்து நிமிட காட்சிகள் கட் செய்யப்பட்டதாகவும் இதனை அடுத்து இந்த படம் கூடுதல் விறுவிறுப்பாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது. எந்தெந்த காட்சிகள் கட் செய்யப்பட்டன என்பது குறித்து படக்குழுவினர் தகவலை வெளியிடவில்லை. இந்த மாற்றம் இன்று முதல் திரையரங்குகளில் திரையிடப்படும் ‘யானை’ படத்தில் இருக்கும் என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து ரசிகர்கள் கருத்து தெரிவித்த போது சில இடங்களில் ‘யானை’ திரைப்படத்தின் வேகம் குறைவது போன்று இருந்தது என்றும் ஆனால் இனிமேல் படத்தை பார்க்கும்போது ஆரம்பம் முதல் இறுதி வரை ஒரே வேகம் இருக்கும் என்று எதிர்பார்க்கலாம் என்றும் கருத்து தெரிவித்துள்ளனர்.

உலகம் முழுவதும் சுமார் 1000 திரையரங்குகளில் வெளியான ‘யானை’ திரைப்படம் கடந்த திங்கள் வரை 12 கோடி ரூபாய் வசூல் செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.