'ஆயுத எழுத்து - டெஸ்ட்'.. பிரபல நடிகருக்கு வாழ்த்து கூறிய சூர்யா. வீடியோ வைரல்..!


Send us your feedback to audioarticles@vaarta.com


ஆயுத எழுத்து முதல் டெஸ்ட் வரை, அவருடைய நடிப்பு அபாரம் என நடிகர் சூர்யா பிரபல நடிகருக்கு வாழ்த்து தெரிவித்தார். அதே நேரத்தில், அவர் நடித்த படத்தின் வீடியோவையும் தனது சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ளார். தற்போது அந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
மாதவன், நயன்தாரா, சித்தார்த், மீரா ஜாஸ்மின் உள்ளிட்ட பலரும் நடித்த ’டெஸ்ட்’ திரைப்படம் நேரடியாக மார்ச் 4ஆம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியாக உள்ளது. இந்த படத்தில் நடித்த நட்சத்திரங்களின் கேரக்டர் வீடியோக்கள் கடந்த சில நாட்களாக வெளியாகி வருகின்றன. குறிப்பாக, சித்தார்த் மற்றும் நயன்தாராவின் வீடியோக்கள் வெளியான நிலையில், சற்றுமுன் மாதவன் கேரக்டரின் வீடியோவை நடிகர் சூர்யா தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.
மேலும், "ஆயுத எழுத்து முதல் டெஸ்ட் வரை, நடிகர் மாதவன் தனது நடிப்பை மிகச்சிறந்த முறையில் அளித்து வருகிறார்" என்றும் "அவருக்கும் அவரது டெஸ்ட் திரைப்படத்தின் குழுவினர்களுக்கும் எனது வாழ்த்துகள்" என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த வீடியோவில், மாதவன் ஆக்ரோஷமாக நடித்த காட்சிகள் இடம் பெற்றுள்ளன. தற்போது, இந்த வீடியோ ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறது.
From Aayutha Ezhuthu to TEST, @ActorMadhavan always gives his Best to everything he does. Cheering for you brother! Wishing team #TEST all success as well!#Nayanthara #Siddharth @sash041075 @chakdyn @StudiosYNot @NetflixIndia pic.twitter.com/sdAo2KI3ng
— Suriya Sivakumar (@Suriya_offl) March 15, 2025
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout

-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com