டிக்டாக் மூலம் பிரபல அரசியல்வாதியை மிரட்டிய சென்னை இளைஞர்கள் கைது!


Send us your feedback to audioarticles@vaarta.com


இன்றைய இளைய தலைமுறையினர் மட்டுமின்றி நடுத்தர வயதைச் சேர்ந்தவர்களும் டிக்டாக் செயலியில் வீடியோக்களை வெளியிட்டு தங்கள் திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர். ஒரு சிலர் இதில் அடிமையாகி இருப்பதும் டிக்டாக் செயலியை சட்டவிரோத செயலுக்கு பயன்படுத்தி வருவதும் உண்டு.
இந்த நிலையில் டிக்டாக் செயலி மூலம் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு மிரட்டல் ஐந்து இளைஞர்கள் மிரட்டல் விடுத்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை தாம்பரம் பகுதியை சேர்ந்த ஐந்து இளைஞர்கள் பட்டாக்கத்தியை காட்டி நாம் தமிழர் கட்சியின் சீமானுக்கு மிரட்டல் விடுத்துள்ளனர்.
இந்த டிக் டாக் வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வந்தநிலையில் இது குறித்து விசாரணை செய்த போலீசார் ஐந்து இளைஞர்களை கைது செய்துள்ளனர். மணி, சுரேஷ், கிஷோர், அஜித் மற்றும் நிஷாந்த் ஆகிய கைது செய்யப்பட்ட ஐந்து இளைஞர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர் நாம் தமிழர் கட்சியில் சீமானுக்கு டிக் டாக் மூலம் மிரட்டல் விடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.