close
Choose your channels
PatamPoochi
mayoon

முதல்முறையாக பிரபல நடிகருக்கு ஜோடியாகும் த்ரிஷா: இயக்குனர் யார் தெரியுமா?

Tuesday, May 24, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கடந்த 20 ஆண்டுகளாக திரையுலகில் நாயகியாக நடித்து வரும் த்ரிஷா, ரஜினி, கமல், அஜித், விஜய், சூர்யா, விக்ரம், தனுஷ், சிம்பு உள்பட பல நடிகர்களுடன் ஜோடியாக நடித்த நிலையில் தற்போது முதல் முறையாக மோகன்லாலுக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடிக்க உள்ளார்

’த்ரிஷ்யம்’ என்ற படத்தை எடுத்து உலகப் புகழ்பெற்ற இயக்குனர் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால் ஒரு திரைப்படத்தில் நடிக்க உள்ளார். ‘ராம்’ என்ற டைட்டில் வைக்கப்பட்ட இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பே தொடங்குவதாக இருந்தது

ஆனால் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக படப்பிடிப்பு ஒத்தி வைக்கப்பட்டது என்பதும் அதன் பின் மோகன்லால் வேறு சில படங்களில் பிஸியானார் என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் ‘ராம்’ படத்தின் படப்பிடிப்பை மீண்டும் தொடர படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர். இந்த படத்தில் முதல் முறையாக மோகன்லாலுக்கு ஜோடியாக த்ரிஷா நடிக்க உள்ளார். இதனை அடுத்து இந்த படத்திற்கு நல்ல எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.