close
Choose your channels
LoveToday
CWK

விஜயகாந்தா இவர்? லேட்டஸ்ட் புகைப்படத்தை பார்த்து அதிர்ச்சி அடைந்த ரசிகர்கள்!

Monday, February 28, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தேமுதிக தலைவர் விஜயகாந்த்தின் லேட்டஸ்ட் புகைப்படத்தை பார்த்து ஆள் அடையாளமே தெரியவில்லை என ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

தேமுதிக தலைவர் விஜயகாந்த் தமிழ் சினிமாவில் அதிரடி ஆக்ஷன் ஹீரோவாக பல ஆண்டுகளாக வலம் வந்தவர் என்பது தெரிந்ததே. அதன் பிறகு அரசியலில் குதித்து தேமுதிக என்ற கட்சியைத் தொடங்கி தேர்தலிலும் போட்டியிட்டார். அவரது கட்சி முதல் தேர்தலில் ஒரே ஒரு இடத்தில் மட்டும் வெற்றி பெற்றாலும் அடுத்த தேர்தலில் அவரது கட்சி எதிர்க்கட்சி ஆனது. இதனை அடுத்து அவருடைய கட்சியுடன் கூட்டணி அமைக்க அதிமுக மற்றும் திமுக ஆகிய இரண்டு பெரிய கட்சிகளும் இந்த ஆர்வம் காட்டின.

இது நிலையில் திடீரென விஜயகாந்துக்கு உடல் நல குறைவு ஏற்பட்டதை அடுத்து அவர் அரசியலில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக விலகினார். அதனை அடுத்து அவரது கட்சியும் வீழ்ச்சி அடையத் தொடங்கியது.

இந்த நிலையில் சமீபத்தில் விஜயகாந்த் புகைப்படம் ஒன்று இணையதளங்களில் வைரலாகி வரும் நிலையில் அந்த புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். விஜயகாந்தா இவர்? ஆள் அடையாளமே தெரியவில்லை என்று அதிர்ச்சி அடைந்தாலும் அவர் தெளிவாக உடல்நலமுடன் இருப்பது போல் தெரிவதால் ரசிகர்கள், தொண்டர்கள் நிம்மதி அடைந்துள்ளதோடு, மீண்டும் விஜயகாந்த், பழைய விஜயகாந்த் வரவேண்டும் என்று தங்களுடைய விருப்பத்தை தெரிவித்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.