close
Choose your channels
Viruman
Laal

ரஜினியின் 'ஜெயிலர்' இன்னொரு 'பேட்ட' படமா? என்ன சொல்கிறார்கள் ரசிகர்கள்?

Friday, June 17, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகயிருக்கும் திரைப்படத்தின் டைட்டில் ’ஜெயிலர்’ என்று சன் பிக்சர்ஸ் நிறுவனம் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மேலும் இதுகுறித்து அட்டகாசமான போஸ்டரும் வெளியாகி அந்த போஸ்டர் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்த நிலையில் ’ஜெயிலர்’ படத்தின் டைட்டில் குறித்து ரசிகர்கள் சமூக வலைதளங்களில் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். 'பேட்ட’ படத்தில் ரஜினிகாந்த் வார்டன் கேரக்டரில் நடித்தது போல், இந்த படத்தில் ’ஜெயிலர்’ கேரக்டரில் நடிப்பதாகவும், எனவே இந்த 'பேட்ட’ படம் போன்று ’ஜெயிலர்’ படமும் சூப்பர் ஹிட் படமாக இருக்கும் என்றும் தெரிவித்து வருகின்றனர்.

முரட்டுத்தனமான கைதிகளை சமாளிக்கக்கூடிய ஜெயிலர் கேரக்டரில் தான் ரஜினிகாந்த் நடிக்க இருப்பதாகவும் எனவே இன்னொரு 'பேட்ட’ வேலன் கதாபாத்திரத்தை எதிர்பார்க்கலாம் என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

மேலும் ’பாட்ஷா’ படத்தின் டைட்டிலும் மஞ்சள் கலரில் இருந்தது என்றும் ’ஜெயிலர்’ படத்தின் டைட்டிலும் மஞ்சள் கலரில் இருப்பதால் ’பாட்ஷா’ படம் போலவே ’ஜெயிலர்’ படமும் வெற்றி பெறும் என சென்டிமென்ட்டாக சில ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர் .

மொத்தத்தில் ரஜினிகாந்த் படத்தின் டைட்டில் சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.