close
Choose your channels
sisa

கமல் மகளை சாடினாரா பிரபு சாலமன்?

Saturday, July 8, 2017 • தமிழ் Comments

பிரபல இயக்குனர் பிரபுசாலமன் தற்போது 'கும்கி 2' படத்தின் திரைக்கதையில் கவனம் செலுத்தி வருகிறார். முற்றிலும் புதுமுகங்கள் நடிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் பிரபுசாலமன் தனது டுவிட்டரில் பிரபல நடிகை ஒருவரின் சம்பளம் குறித்து சர்ச்சைக்குரிய ஒரு கருத்தை தெரிவித்ததாக ஒரு வதந்தி இன்று காலை முதல் மிக வேகமாக பரவியது. 'நாயகிகள் - ஒரு நாள் சம்பளம் 85,000 + 2 கோடி சம்பளம் + டிரைவர், ஏசி கேரவன். ஆனால் ஒரு நாள் 5 மணி நேரத்துக்கு மேல் நடிக்க மாட்டார். பெரிய நடிகரின் மகள்" என்று அவர் டுவீட் செய்ததாக கூறப்பட்டது. இந்த பதிவின் கமெண்டில் பெரும்பாலானோர் அது கமல் மகள் ஸ்ருதிஹாசன் தான் என்று பதிவு செய்தனர்.
ஆனால் இதுகுறித்து பிரபுசாலமன் தரப்பினர் கூறியபோது 'எந்த ஒரு சமூக வலைத்தளத்திலும் பிரபுசாலமனுக்கு அக்கவுண்ட் இல்லை என்றும், இந்த சர்ச்சைக்கருத்து அவர் பெயரால் ஆரம்பிக்கப்பட்ட போலி அக்கவுண்ட் என்றும் விளக்கமளித்தனர். நடிகைகளால் பெரிய அளவில் பாதிக்கப்பட்ட யாரோ ஒருவர் தான் இந்த டுவீட்டை பதிவு செய்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Get Breaking News Alerts From IndiaGlitz