நீங்கள் பாடகிதானா? வைரலாகும் ஜோனிதாவின் வெறித்தனமான வொர்க் அவுட் வீடியோ!


Send us your feedback to audioarticles@vaarta.com


சமீபகாலமாக இணையதளத்தை ஆட்டிப் படைத்துவரும் “அரபிக்குத்து“ பாடலுக்கு பின்னணி குரல் கொடுத்ததோடு மட்டுமல்லாமல் அந்தப் பாடலின் லிரிக்கல் வீடியோவில் தனது க்யூட்டான ரியாக்ஷன்களை காட்டி ரசிகர்களிடையே பிரபலமானவர்தான் பாடகி ஜோனிதா காந்தி.
விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் “பீஸ்ட்“ திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் அந்தப் படத்தின் முதல் லிரிக்கல் வீடியோ வெளியாகி ரசிகர்களிடையே ஏகபோக வரவேற்பை பெற்றுவரும் நிலையில் அந்த வீடியோவில் இசையமைப்பாளர் அனிருத்துடன் பாடகி ஜோனிதா காந்தியும் இடம்பெற்றிருந்தார். இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் யார் இவர்? ரியல் ஹீரோயின் பூஜா ஹெக்டேவையே மிஞ்சிவிடுவார் போல என கருத்துத் தெரிவித்து வந்தனர்.
இதையடுத்து பாடகி ஜோனிதா காந்தியைப் பற்றிய தகவல்கள் இணையத்தில் வைரலாகியது. அதோடு இயக்குநர் விக்னேஷ் சிவன்- நயன்தாரா தயாரிப்பில் உருவாகிவரும் Walking talking strawberry ice cream எனும் திரைப்படத்தில் இவர் நாயகியாக அறிமுகமாக இருக்கிறார் எனும் தகவலும் வெளியாகி இவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
இந்நிலையில் ஹீரோயின் அவதாரம் எடுக்க இருக்கும் ஜோனிதா காந்தி தற்போது வெறித்தனமாக வொர்க் அவுட்களை செய்து வருகிறார். அதுகுறித்த வீடியோ தற்போது சோஷியல் மீடியாவில் வெளியாகி இவர் உண்மையிலேயே பாடகிதானா? என்று ரசிகர்கள் மத்தியில் கடும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.