close
Choose your channels

'எதிர்நீச்சல்' மதுமிதா சென்ற கார் விபத்து.. மதுபோதையில் ஆண் நண்பருடன் இருந்தாரா?

Tuesday, February 27, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ’எதிர்நீச்சல்’ சீரியலில் ஜனனி என்ற கேரக்டரில் நடித்து வரும் மதுமிதா தனது ஆண் நண்பருடன் காரில் சென்று கொண்டிருந்தபோது அந்த கார் விபத்துக்கு உள்ளானதாகவும் இதையடுத்து அவரிடம் காவல்துறையினர் விசாரணை செய்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

’எதிர்நீச்சல்’ மதுமிதா தனது ஆண் நண்பருடன் சோழிங்கநல்லூர் பகுதியில் காரில் சென்று கொண்டிருந்ததாகவும் இரண்டு பேரும் மது அருந்தியதாகவும் தெரிகிறது. இந்த நிலையில் ஒருவழி பாதையில் தவறான ரூட்டில் அவர்கள் வேகமாக காரை ஓட்டிச் சென்றபோது எதிரே பைக்கில் வந்த போலீஸ்காரர் ஒருவர் மீது இவர்களுடைய கார் மோதியது.

இதில் போலீஸ்காரர் படுகாயம் அடைந்த நிலையில் அவர் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று மதுமிதா மற்றும் அவரது ஆண் நண்பரை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை செய்தனர். அப்போது ’தங்கள் மீது தவறில்லை என்றும் எதிரே வந்த போலீஸ்காரர் தான் வேகமாக வந்து தங்கள் காரின் மீது மோதி விட்டதாகவும் தெரிவித்தனர்.

மதுமிதாவின் ஆண் நண்பர் கேரளாவை சேர்ந்தவர் என்றும் சென்னையில் ஐடி துறையில் பணிபுரிந்து வருவதாகவும் விசாரணையில் தெரிவித்துள்ளது. இது குறித்து மதுமிதா விளக்கம் அளித்த போது ’அது ஒரு சின்ன விபத்து, என்னுடைய நண்பர் தான் விபத்து செய்து விட்டார், வேறு அதைப் பற்றி பேச எதுவும் இல்லை’ என்று கூறியுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.