close
Choose your channels

'எதிர்நீச்சல்' சீரியல் முடியப்போகும் நேரத்தில் இயக்குனர் திருச்செல்வம் வீட்டில் விசேஷம்.. குவியும் வாழ்த்துக்கள்..!

Friday, May 31, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியலில் ஒன்று ‘எதிர்நீச்சல்’ என்பதும் கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் இரண்டு வருடங்களுக்கு மேலாக ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியல் டிஆர்பி ரேட்டிங்கில் முன்னணி இடத்தை பெற்றுள்ளது என்பது தெரிந்தது.

இந்த சீரியலில் குணசேகரன் என்ற கேரக்டரில் ஜி மாரிமுத்து நடித்து வந்த நிலையில் அவரது மறைவுக்கு பின்னர் சீரியலுக்கு பின்னடைவு ஏற்பட்டாலும் அதன் பின் வேல ராமமூர்த்தி அந்த கேரக்டரில் நடிக்க ஆரம்பித்த பின்னர் மீண்டும் சூடு பிடித்துள்ளது.

இந்த நிலையில் 700 எபிசோடுகளுக்கு மேல் ஒளிபரப்பான இந்த சீரியல் முடிவடைய போவதாகவும் சமீபத்தில் இந்த சீரியலின் கிளைமாக்ஸ் படப்பிடிப்பு நடந்ததாகவும் கூறப்பட்டது. இந்த தகவலை இந்த சீரியலில் குணசேகரன் அம்மா விசாலாட்சி கேரக்டரில் நடித்த சத்யப்ரியா உட்பட ஒரு சிலர் உறுதி செய்துள்ளனர்.

இந்த நிலையில் ஜூலை 8ஆம் தேதி ‘எதிர்நீச்சல்’ சீரியல் முடிவுக்கு வர வாய்ப்பு இருப்பதாக கூறப்படும் நிலையில் ஜூன் 10ஆம் தேதி திருச்செல்வம் வீட்டில் விசேஷம் என்று தகவல் வெளியாகியுள்ளது. அதாவது திருச்செல்வன் மகள் பிரியதர்ஷினிக்கு ஜூன் 10ஆம் தேதி திருமணம் என்றும் இதற்காக அழைப்பிதழ் கொடுக்கும் பணியில் தற்போது அவர் மும்முரமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனை அடுத்து இயக்குனர் திருச்செல்வம் மகளுக்கு ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
Login to post comment
Cancel
Comment