close
Choose your channels
IKK
Jail

'என்னங்க சார் உங்க சட்டம்' ரிலீஸ் தேதி அறிவிப்பு: திரையரங்கிலா? ஓடிடியிலா?

Sunday, October 24, 2021 • தமிழ் Comments

பிரபு ஜெயராம் என்பவரது இயக்கத்தில் கார்த்திக் நடித்துள்ள திரைப்படம் ’என்னங்க சார் உங்க சட்டம்’. இந்த படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் முடிவடைந்து ரிலீசுக்கு தயாராக இருக்கிறது என்பதும் இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது

இந்நிலையில் இந்த படம் ரிலீசுக்கு தயாராகி வந்தாலும் திரையரங்கில் ரிலீஸ் ஆகுமா? அல்லது ஓடிடியில் ரிலீசாகுமா? என்ற குழப்பம் இருந்த நிலையில் தற்போது ஓடிடியில் ரிலீஸ் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது

சோனி லைவ் ஓடிடியில் இந்த படம் வரும் அக்டோபர் 29ஆம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து இந்த படத்தை பார்க்க ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர் என்பது குறிபிடத்தக்கது

இந்த படத்தை தயாரிப்பாளர் சதன் எஸ் மற்றும் ஜி ஜெயராம் இணைந்து தயாரித்துள்ளனர் என்பதும் ‘ஜோக்கர்’ படத்திற்கு பின் உருவான ஒரு அரசியல் கலந்த காமெடி படமாக உருவாகி உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Get Breaking News Alerts From IndiaGlitz