close
Choose your channels
siren
lal_salaam

கப்பு முக்கியம் பிகிலே..... ராஜூவை வெளியில் இருந்து வாழ்த்தும் பிரபலம்!

Sunday, January 9, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இறுதி கட்டம் நெருங்கியுள்ள நிலையில் இறுதிப்போட்டிக்கு தற்போது நான்கு போட்டியாளர்கள் உறுதி செய்யப்பட்டு உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இன்றைய கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் எபிசோடில் ஏற்கனவே பிக்பாஸ் வீட்டில் போட்டியாளர்களாக கலந்து விட்டு வெளியேறிய பிக்பாஸ் பிரபலங்கள் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றவர்களுக்கு தொலைபேசி மூலம் வாழ்த்து தெரிவிக்கும் நிகழ்வு நடைபெறுகிறது.

இதில் தாமரைக்கு வருண் வாழ்த்து தெரிவிக்கின்றார். நீங்கள் ஏற்கனவே வென்று விட்டீர்கள் என்றும் வென்றுவிட்டு வாருங்கள் என்றும் தாமரைக்கு வாழ்த்து தெரிவித்தனர். அதேபோல் பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவராகிய இமான் அண்ணாச்சி, ராஜூவுக்கு கூறும் வாழ்த்து செய்தியில் ’கப்பு முக்கியம் பிகிலே..... கப்போடுதான் வெளியே வரவேண்டும் என்று அவர் வாழ்த்து தெரிவிக்கும் போது, ‘கண்டிப்பாக வென்று வருகிறேன் என்று ராஜூ கூறுகிறார்.

இன்றைய எபிசோடில் வெளியிலிருந்து பிரபலங்கள் உள்ளே இருக்கும் போட்டியாளர்களுக்கு வாழ்த்து தெரிவிக்கும் காட்சிகள் சுவாரஸ்யமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.