close
Choose your channels
DJ
DJ

அதிகாலை 4 மணி காட்சிகளுடன் ரீரிலீசாகும் 'பாபா': ரிலீஸ் தேதி இதுதான்!

Saturday, November 26, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாக மாஸ் நடிகர்களின் திரைப்படங்கள் அதிகாலை 4:00 மணி காட்சிகளாக திரையிடப்பட்டு வருகின்றன என்பதை பார்த்து வருகிறோம். அந்த வகையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கடந்த 2002ஆம் ஆண்டு நடித்த ’பாபா’ திரைப்படம் மீண்டும் எடிட்டிங் செய்யப்பட்டு டிஜிட்டலில் ரிலீஸாக உள்ள நிலையில் இந்த படத்தையும் அதிகாலை 4:00 மணி காட்சி திரையிட பல திரையரங்குகள் முன்வந்துள்ளதாக கூறப்படுகிறது

’பாபா’ படத்தின் டிஜிட்டல் ரிலீஸ் குறித்த பணிகள் முடிவடைந்து விட்டதாகவும் வரும் டிசம்பர் 12ஆம் தேதி சூப்பர் ஸ்டார் ரஜினியின் பிறந்தநாளில் இந்த படம் வெளியாகும் என்றும் இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா தெரிவித்துள்ளார்.

கடந்த 2002ஆம் ஆண்டு இந்த படம் வெளியானபோது எதிர்பார்த்த வரவேற்பை பெறாத தோல்வி படமாக இருந்த நிலையில் இந்த படத்தை மறுபடியும் எடிட்டிங் செய்து தற்போது டிஜிட்டலில் ரிலீஸ் செய்யப்பட உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த முறை இந்த படம் வெற்றி பெறுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். மேலும் இந்த படம் புதிய ரிலீஸ் படங்கள் போல் அதிகாலை காட்சி திரையிடப்பட உள்ளது ரசிகர்களுக்கு பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

ரஜினிகாந்த், மனிஷா கொயாலா, கவுண்டமணி, சுஜாதா, நம்பியார், ஆசிஷ் வித்யார்த்தி, விஜயகுமார் உள்பட பலரது நடிப்பில் உருவான இந்த படத்தை ரஜினிகாந்த் தயாரித்துள்ளதோடு, கதை, திரைக்கதையும் எழுதியுள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.