close
Choose your channels
LoveToday
CWK

ஐஸ்வர்யா ராய் பிரமாதம்.. நந்தினிக்கு டப்பிங் கொடுத்த பிரபலத்தின் பதிவு!

Sunday, October 2, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

மணிரத்னம் இயக்கிய ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தில் ஐஸ்வர்யா ராய் பிரமாதமாக நடித்து இருந்தார் என்றும் டப்பிங்கில் பார்த்துக் கொள்ளலாம் என்று அசட்டையாக இல்லாமல் தமிழ் வார்த்தைகளை அவர் முறையாக கற்று பேசினார் என்றும் அதனால் தான் தனக்கு டப்பிங் செய்வதற்கு எளிமையாக இருந்தது என்றும் ஐஸ்வர்யா ராய் நடித்த நந்தினி கேரக்டருக்கு டப்பிங் கொடுத்த தீபாவெங்கட் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

மணிரத்னம் இயக்கத்தில் உருவான ’பொன்னியின் செல்வன்’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ள நிலையில் இந்த படத்தில் நந்தினி கேரக்டரில் நடித்த ஐஸ்வர்யா ராய்க்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் நந்தினி கேரக்டருக்கு டப்பிங் கொடுத்த தீபா வெங்கட் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூறியிருப்பதாவது: ஐஸ்வர்யாராய் அவர்களுக்கு டப்பிங் கொடுத்தது இன்ப அதிர்ச்சியாக இருந்தது என்றும் அவர் முறையாக தமிழ் பேசியதை பார்த்து நான் உண்மையில் ஆச்சரியமடைந்தேன் என்றும் கூறினார்.

அன்றாடம் தமிழ்பேசும் நமக்கே சில வார்த்தைகள் பேசுவதில் சவாலாக இருக்கும் என்றும் ஆனால் அது செந்தமிழை மிகவும் அழகாக உணர்ச்சியுடன் ஐஸ்வர்யா ராய் பேசினார் என்றும், அவரது நடிப்பும் பிரமாதம் என்று தீபா வெங்கட் தெரிவித்துள்ளார்.

மேலும் தமிழை சரியாக பேச வேண்டும் என்பதற்காக ஒரு மாணவியை போல வீட்டுப்பாடம் செய்து இருக்கிறார் என்றும் ’டப்பிங்கில் பார்த்துக்கொள்ளலாம்’ என்று இல்லாமல் படப்பிடிப்பின் ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு வரிகளையும் அவர் நன்றாக தெரிந்து புரிந்து பேசினார் என்றும், எவ்வளவு உயரம் சென்றாலும் அவர் எதையும் சாதாரணமாக எடுத்துக் கொள்ளாமல் முழு ஈடுபாட்டுடன் தமிழில் வசனம் பேசி நடித்து உள்ளார் என்றும் தீபா வெங்கட் பாராட்டியுள்ளார்.

மேலும் ஐஸ்வர்யாராய் அவர்களுக்கு டப்பிங் பேச வாய்ப்பு அளித்த மணிரத்னம் அவர்களுக்கு எனது நன்றிகள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.