தகாத உறவை மறைக்க ரூ.12 கோடி மதிப்புள்ள பரிசுப்பொருள்… இளவரசியின் குட்டு அம்பலம்!!!
துபாய் இளவரசியான ஹயா தனது மெய்க்காப்பாளர்களுள் ஒருவரான ரஸ்ஸல் ஃப்ளவர்ஸ் என்பவருக்கு ரூ.12 கோடி மதிப்புள்ள கடிகாரம் மட்டுமல்லாது பல விலையுயர்ந்த பொருட்களை பரிசாகக் கொடுத்துள்ளார் என்ற தகவலை டெயிலி மெயில் வெளியிட்டு இருக்கிறது. துபாய் நாட்டு மன்னரான ஷேக் முகமது பின் ரஷீத் கல் (70). இவருடைய ஆறாவது மனைவி ஹயா (37). இவர் தனது மெய்க்காப்பளரான ரஸ்ஸல் என்பவருடன் தகாத உறவில் இருந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் தனது தகாத உறவை மறைப்பதற்காகவே ஹயா விலை உயர்ந்த பரிசுப் பொருட்களை ரஸ்ஸலுக்கு வழங்கினார் என்று ஒரு குற்றச்சாட்டு எழுந்து உள்ளது. இந்தக் குற்றச்சாட்டை அடிப்படையாக வைத்து அவரிடம் இருந்து விவாகரத்தையும் மன்னர் பெற்றுள்ளார். இந்தச் சம்பவம் அந்நாட்டில் கடும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
ஹயா கொடுக்கும் விலை உயர்ந்த பரிசுப் பொருட்களுக்கு மயங்கி ரஸ்ஸலின் மனைவியும் இவருடன் நெருக்கமான நட்பில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் மன்னனின் விவகாரத்து வழக்கு அந்நாட்டு உயர் நீதிமன்றத்தல் விசாரணைக்கு வந்தபோது இந்தத் தகவலை வெளியிட்டு விவகாரத்துக்கு கோரப்பட்டு உள்ளது. இதனால் தனது இளவரசி பட்டத்தை துறந்து ஹயா தனது குழந்தைகளுடன் மேற்கு லண்டனில் வசித்து வருவதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது.