விஜய் அண்ணா மக்கள் பணி செய்து நான் பார்த்ததே இல்லை.. பிரபல நடிகரின் மகள் பேட்டி..!


Send us your feedback to audioarticles@vaarta.com


விஜய் அண்ணா இதுவரை மக்கள் பணி செய்து நான் பார்த்ததே இல்லை என பிரபல நடிகர் சத்யராஜ் மகள் திவ்யா சத்யராஜ் பேட்டி அளித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழ் சினிமாவின் முக்கிய நடிகர்களில் ஒருவரான சத்யராஜ் மகள் திவ்யா சத்யராஜ் ஊட்டச்சத்து நிபுணர் என்பதும் இவர் சமீபத்தில் தான் திராவிட முன்னேற்றக் கழகத்தில் தன்னை இணைத்து கொண்டார் என்பதும் தெரிந்தது.
மேலும் 2026-ல் இவர் தேர்தலில் போட்டியிடுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் சமீபத்தில் ஊடகம் ஒன்றுக்கு திவ்யா சத்யராஜ் பேட்டி அளித்த போது ’விஜய் அண்ணா இதுவரை மக்கள் பயணி செய்து நான் பார்த்ததே இல்லை’ என்று கூறினார்.
1991 ஆம் ஆண்டு பூவே உனக்காக படம் ரிலீஸ் ஆன போதே விஜய் மிகப்பெரிய வெற்றியை கண்டவர். 30 வருடங்களுக்குப் பிறகு கட்சி தொடங்கி, மாநாடு நடத்தி, சமூகப் பணியை தொடங்க வேண்டிய அவசியம் இல்லை. அவருடைய அரசியல் குறித்து சொல்வதற்கு ஒன்றுமில்லை என்று தெரிவித்தார்.
மேலும் திமுக மீது ஊழல் குற்றச்சாட்டுகளை விஜய் கூறி வருவது குறித்த கேள்விக்கு பதில் அளித்த திவ்யா, "திமுக உண்மையில் ஊழல் செய்தது என்றால் அதை விஜய் நிருபிக்க வேண்டும். பொத்தாம் பொதுவாக அவர் கூறினார் என்றால் அது வெறும் அவதூறு மட்டுமே" என்றும் தெரிவித்துள்ளார்.
திமுகவில் இணைந்த பின்னர் திவ்யா சத்யராஜின் முதல் பேட்டியே விஜய்க்கு எதிரான கருத்துக்கள் இருப்பதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout

-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com