close
Choose your channels
NMM
NMM

'வடசென்னை 2' படம் எப்போது? இயக்குனர் வெற்றிமாறன் தகவல்!

Sunday, July 31, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தனுஷ் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவான ’வடசென்னை’ திரைப்படம் கடந்த 2018ஆம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் உருவாகும் என்று கூறப்பட்ட நிலையில் தனுஷ் மற்றும் வெற்றிமாறன் ஆகிய இருவரும் தங்களது அடுத்தடுத்த படங்களில் பிஸியானதால் இந்த படம் தள்ளிப் போய்க் கொண்டே இருந்தது.

இந்த நிலையில் நேற்று தனுஷ் நடித்த ’திருச்சிற்றம்பலம்’ என்ற திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இயக்குநர் வெற்றிமாறன் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியபோது ’வடசென்னை 2’ படம் குறித்த கேள்வியை பலர் கேட்கின்றர்கள், தற்போது இயக்கி வரும் ’விடுதலை’ மற்றும் இந்த படத்தை அடுத்து இயக்க இருக்கும் சூர்யாவின் ’வாடிவாசல்’ ஆகிய படங்களை அடுத்து ’வடசென்னை 2’ படம் தொடங்கப்படும் என்று கூறினார்.

இதனை அடுத்து ’வடசென்னை 2’ திரைப்படம் விரைவில் உருவாகும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தனுஷ் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.