close
Choose your channels
Don
Nenjukku Needhi

'ஜெயில்' படத்துக்கு எத்தனை பிரச்சினை தான் வரும்: வசந்தபாலன் பதிவு

Monday, November 29, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல இயக்குனர் வசந்தபாலன் இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் நடிப்பில் உருவான ’ஜெயில்’ திரைப்படம் டிசம்பர் 9ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இந்த படத்திற்கு ஒரு சில பிரச்சினைகள் இருப்பதாகவும் அதனால் திட்டமிட்டபடி ரிலீஸ் ஆவது சந்தேகம் என்றும் ஒரு சிலர் தெரிவித்து வருகின்றனர்

இந்த நிலையில் இதுகுறித்து இயக்குனர் வசந்தபாலன் தனது முகநூல் பதிவில் கூறியிருப்பதாவது:

சென்ற வாரம் வலைப்பேச்சு நிகழ்ச்சியில் ’ஜெயில்’ திரைப்படம் வெளியாவதில் சிக்கல் நீடிக்கிறது என்று வெளிவந்ததை ஒட்டி திரையுலகைச் சேர்ந்த பல பிரபல நண்பர்கள் என்னிடம் இந்த ’ஜெயில்’ படத்துக்கு எத்தனை பிரச்சினை தான் வரும் என்று தங்களின் வருத்தங்களைத் தெரிவித்தார்கள். விரைவில் தீர்வு காணப்படவேண்டும் என்று வேண்டிக் கொண்டார்கள்.

இரண்டு நாட்களுக்கு முன்பு ’ஜெயில்’ தயாரிப்பாளர் ஸ்ரீதரன் அவர்களுக்கும் ஸ்டுடியோ கிரீன் ஞானவேல்ராஜா அவர்களுக்குமிடையே ஒரு புரிந்துணர்வு ஏற்பட்டு விட்டது. ஆகவே தடைகள் முழுமையாக நீங்கி டிசம்பர் 9ம் தேதி திரையரங்குகளில் ’ஜெயில்’ வெளியாகும்’ என்று தெரிவித்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.