close
Choose your channels

தனுஷின் 'கர்ணன்' டீசர் குறித்து எச்சரிக்கை விடுத்த இயக்குனர்!

Monday, March 22, 2021 • தமிழ் Comments

தனுஷ் நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘கர்ணன்’ திரைப்படத்தின் டீசர் நாளை இரவு 7.01 மணிக்கு வெளியாகும் என சற்று முன்னர் அறிவிக்கப்பட்டது என்ற செய்தியை பார்த்தோம். இந்த டீசருக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தனுஷின் ‘கர்ணன்’ பட டீஸர் குறித்து தனுஷின் நெருங்கிய நண்பரும் தனுஷ் நடித்த ‘சீடன்’, ‘திருடா திருடி’ உள்பட சில படங்களை இயக்கியவருமான சுப்பிரமணியம் சிவா தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு எச்சரிக்கை டுவிட்டை பதிவு செய்துள்ளார். அவர் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது:

எச்சரிக்கையாக இருங்கள்!

நேற்றும் ’கர்ணன்’ டீசர் பார்த்தேன்.
குலை நடுங்க வைக்கிறார்
மாரி செல்வராஜ்

தனுஷ் என்ற அசுரன்
எதிரியாக
நினைப்பவர்களும்
கொண்டாடிதான் ஆக
வேண்டும் என திரும்பவும் வாய்ப்பு ஏற்படுத்தி கொடுத்து,
முடிவில் பயத்தையும் பதட்டத்தையும் தந்தும் அனுப்புகிறார் கர்ணனாக!

Get Breaking News Alerts From IndiaGlitz