close
Choose your channels
iruttu
Capmaari

பா.ரஞ்சித்தின் அடுத்த படத்தின் அதிகாரபூர்வ ரிலீஸ் தேதி

Wednesday, November 13, 2019 • தமிழ் Comments

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’கபாலி’ மற்றும் ’காலா’ ஆகிய இரண்டு திரைப்படங்களை தொடர்ச்சியாக இயக்கிய இயக்குனர் பா ரஞ்சித், தற்போது ஆர்யா நடிக்கும் படம் ஒன்றை இயக்க ஆரம்பகட்ட பணிகளில் ஈடுபட்டு வருகிறார்

இந்த நிலையில் ரஞ்சித்தின் நீலம் புரடொக்சன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவான ’இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு’ என்ற திரைப்படத்தின் ரிலீஸ் தேதி தற்போது வெளியாகியுள்ளது. இந்தப் படம் டிசம்பர் 6ஆம் தேதி வெளியாகும் என படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்

அதியன் ஆதிரை இயக்கியுள்ள இந்தப் படத்தில் அட்டகத்தி தினேஷ் நாயகனாகவும் மேலும் முக்கிய கேரக்டர்களில் ரித்விகா, ஜான் விஜய் உள்பட பலர் நடித்துள்ளனர்

இந்த படம் இரண்டாம் உலகப்போரின்போது தொலைந்து போன ஒரு குண்டு குறித்த கதை அம்சம் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது இந்த படம் சென்சாரில் யூ சான்றிதழ் பெற்றதோடு சென்சார் அதிகாரிகளின் பாராட்டைப் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது

Get Breaking News Alerts From IndiaGlitz