இதையாவது ஒப்புக்கொள்வீர்களா, முதல்வர் ஸ்டாலின் அவர்களே? பா. ரஞ்சித் கேள்வி..!


Send us your feedback to audioarticles@vaarta.com


தலித் மக்களின் மீது வன்முறை சம்பவங்கள் தொடர்ந்து நிகழ்த்தப்பட்டு வருகின்றன. இதை தடுக்கவோ அல்லது குறைந்தபட்சம், "இப்படி நடந்து கொண்டு இருக்கிறது" என்பதையாவது ஒப்புக்கொள்வீர்களா? என தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களை நோக்கி இயக்குனர் பா. ரஞ்சித் கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று காலை தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில், திமுக அரசு செய்த சாதனைகள், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி 'டப்பிங் பாய்ஸ்', பாலியல் குற்றங்கள், வெளி மாவட்ட பயணங்கள், பற்றி எரிந்த மணிப்பூர் உள்பட பல்வேறு விஷயங்கள் குறித்து பேசினார்.
முதல்வரின் இந்த வீடியோவை தனது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்த இயக்குனர் பா. ரஞ்சித், தலித் மக்கள் மீது சாதியரீதியிலான வன்முறைகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், அதை தமிழக அரசு தடுக்கவில்லை. குறைந்தபட்சம், "இப்படி நடந்து கொண்டிருக்கிறது" என்பதையாவது ஒப்புக்கொள்வார்கள்? எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தனது பதிவில் கூறியிருப்பதாவது:
"தமிழ்நாட்டில் மிகக் கொடுமையான சாதியரீதியிலான வன்கொடுமைகள் தங்கு தடையின்றி நடைபெற்று வருகின்றன. கடந்த சில தினங்களில் மட்டும் பல வன்முறை சம்பவங்கள் தலித் மக்களின் மீது நிகழ்த்தப்பட்டுள்ளன. இதை தடுக்கவோ அல்லது குறைந்தபட்சம், 'இப்படி நடந்து கொண்டிருக்கிறது' என்பதையாவது ஒப்புக்கொள்வீர்களா, மாண்புமிகு முதல்வர் ஸ்டாலின் அவர்களே!
தங்கள் அமைச்சரவையின் கீழ் இயங்கும் ஆதிதிராவிடர் துறை மற்றும் தனித்தொகுதி MLA, MP அவர்களுக்கு இதை விட வேறு முக்கியமான பணிகள் இருப்பதால், நாங்கள் வேண்டுமானால் சமீப காலங்களில் தலித் மக்களின் மீது நிகழ்த்தப்பட்ட வன்முறைகள் குறித்து அறிக்கை சமர்ப்பிக்கிறோம். நன்றி!"
தமிழ்நாட்டில் மிகக் கொடுமையான சாதியரீதியிலான வன்கொடுமைகள் தங்கு தடையின்றி நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. கடந்த சில தினங்களில் மட்டும் பல வன்முறை சம்பவங்கள் தலித் மக்களின் மீது நிகழ்த்தப் பட்டிருக்கிறது. இதை தடுக்க அல்லது குறைந்தப்பட்சம் இப்படி நடந்துகொண்டு இருக்கிறது என்பதையாவது… https://t.co/t4Bruzfhal
— pa.ranjith (@beemji) February 15, 2025
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments