close
Choose your channels
PKK

'அரபிக்குத்து' பாடலுக்கு செம ஆட்டம் ஆடிய இயக்குனர் நெல்சன் மகன்!

Saturday, February 19, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய் நடித்த ’பீஸ்ட்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ’பீஸ்ட்’ படத்தில் பெற்றிருந்த ’அரபிக்குத்து’ என்ற பாடல் சமீபத்தில் வெளியானது என்பதும், இந்த பாடல் பார்வையாளர்கள் எண்ணிக்கையில் மிகப்பெரிய சாதனையை செய்துள்ளது என்பதும் தெரிந்ததே.

’அரபிக்குத்து’ பாடலுக்கு நடிகை சமந்தா உள்பட பல திரையுலக பிரபலங்கள் நடனமாடிய வீடியோக்களும் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வரும் நிலையில் ’பீஸ்ட்’ படத்தின் இயக்குனர் நெல்சன் மகன் ஆத்விக், அரபிக்குத்து பாடலுக்கு நடனமாடிய வீடியோவை நெல்சனின் மனைவி மோனிஷா நெல்சன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். ’அரபிக்குத்து’ பாடலுக்கு செம டான்ஸ் ஆடும் நெல்சன் மகனின் இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.

விஜய் நடித்த ’பீஸ்ட்’ படத்தை அடுத்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் ’தலைவர் 169’ படத்தை நெல்சன் இயக்க இருக்கிறார் என்பதும் இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.