NEEK படம் பார்த்த பிரபல இயக்குனர்.. முதல் விமர்சனமும் அதற்கு தனுஷ் பதிலும்..!


Send us your feedback to audioarticles@vaarta.com


தனுஷ் இயக்கத்தில் உருவான "நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்" என்ற திரைப்படம் வரும் 21ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கும் நிலையில், இந்த படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
தனுஷின் உறவினர் பவிஷ் ஹீரோவாக நடிக்கும் இந்த படத்தில் அனிகா சுரேந்திரன் மற்றும் பிரியா பிரகாஷ் வாரியர் ஆகிய இருவரும் நாயகிகளாக நடித்துள்ளனர். மேலும், இந்த படத்தில் தனுஷ் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி, இணையத்தில் வைரலாகி வருகிறது. இதற்கிடையில், இந்த படத்தை பிரபல இயக்குனர் மாரி செல்வராஜ் பார்த்து, தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட பதிவு தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
"நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்" படத்தை பார்த்துவிட்டேன். நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு சாதாரண காதல் கதையை பார்த்த மகிழ்ச்சி எனக்கு ஏற்பட்டது. தனுஷ் அவர்கள் உருவாக்கிய இந்த படத்தின் ஒவ்வொரு காட்சிகளையும் பார்த்து பரவசமடைந்தேன். இந்த படத்தை திரையரங்கில் பார்க்கும் ரசிகர்கள் அனைவரும் அதை உணர்ந்து பகிர்ந்து கொள்ளப் போகிறார்கள்.
ஒவ்வொரு மனிதனின் உச்சமான மகிழ்ச்சி என்பது காதலியின் அப்பாவித்தனத்தில் தான் உள்ளது. அந்த உணர்வை தனது கலை திறமையால் உயிர்ப்புக வைத்திருக்கிறார் இயக்குனர் தனுஷ். NEEK படக்குழுவினர்களுக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள்!" என்று தெரிவித்துள்ளார்.
இதற்கு நன்றி தெரிவித்துள்ள தனுஷ், "உங்களது பாராட்டு எனக்கும் என் குழுவினர்களுக்கும் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எங்கள் குழு, இளம் நடிகர்களையும் தொழில்நுட்ப கலைஞர்களையும் மகிழ்ச்சி அடையச் செய்துவிட்டீர்கள்" என்று தெரிவித்துள்ளார்.
NEEK படத்தின் முதல் விமர்சனமும், அதற்குத் தனுஷ் அளித்த பதிலும் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
Thank you so much Mari. Means a lot to me and my team. You just made a bunch of young actors and technicians very happy. 🤗 https://t.co/ywuJCYHevr
— Dhanush (@dhanushkraja) February 9, 2025
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout

-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com