close
Choose your channels
Por
Joshwa

என்னோட முந்தைய 2 படத்தையும் பாக்காதீங்க.. இன்று வெளியாகும் படத்தின் இயக்குனர் வேண்டுகோள்..!

Friday, October 6, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இன்று வெளியாகும் படத்தின் இயக்குனர் தனது சமூக வலைத்தளத்தில் என்னுடைய முந்தைய இரண்டு படத்தையும் பார்க்க வேண்டாம் என்றும் அப்போதுதான் இந்த படம் உங்களுக்கு பிடிக்கும் என்றும் கூறி இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

விஜய் ஆண்டனி நடித்த ’ரத்தம்’ த்ரிஷா நடித்த ’தி ரோட்’, ‘இறுகப்பற்று’ உள்பட ஒரு சில திரைப்படங்கள் இன்று வெளியாக உள்ளது. இந்த நிலையில் இன்று வெளியாகும் படங்களில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் படங்களில் ஒன்று விஜய் ஆண்டனி நடித்த ’ரத்தம்’

சிஎஸ் அமுதன் இயக்கத்தில் உருவான இந்த படத்தின் டிரைலர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது என்பதும் அது மட்டும் இன்றி கடந்த சில நாட்களுக்கு முன்னர், முதல் ஐந்து நிமிட காட்சிகள் வெளியாகி படத்தின் எதிர்பார்ப்பை அதிகரித்தது என்பதையும் பார்த்தோம்.

இந்த நிலையில் இயக்குனர் சி.எஸ் அமுதன் தனது சமூக வலைத்தளத்தில் ஒரு வேண்டுகோள் வைத்துள்ளார். அந்த வேண்டுகோளில் ’விஜய் ஆண்டனி நடித்த ’ரத்தம்’ படம் இயக்கிய நான் உங்களிடம் ஒரு வேண்டுகோள் விடுகிறேன். இந்த படத்தை நீங்கள் முழுவதுமாக ரசிக்க வேண்டும் என்றால், நான் இயக்கிய ’தமிழ்ப்படம்’ ’தமிழ்படம் 2’ ஆகிய இரண்டு படத்தையும் பார்க்காதீங்க அப்பதான் இந்த படம் உங்களுக்கு பிடிக்கும்’ என்று கூறியுள்ளார். இந்த வேண்டுகோள் ரசிகர்களுக்கு பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Related Videos