close
Choose your channels
Por
Joshwa

நாளை வெளியாகும் படத்தில் துருவ் விக்ரம் கேமியோவா? ரோலக்ஸ் மாதிரி மாஸ் இருக்குமா?

Wednesday, August 23, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சியான் விக்ரம் மகன் துருவ் விக்ரம் நாளை வெளியாகியுள்ள மாஸ் ஆக்சன் திரைப்படத்தில் கேமியோ வேடத்தில் நடித்திருப்பதாகவும் அந்த கேரக்டர் ரோலக்ஸ் கேரக்டருக்கு இணையாக இருக்கும் என்றும் கூறப்படுவது திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பிரபல மலையாள நடிகர் துல்கர் சல்மான் நடிப்பில் உருவான ’கிங் ஆப் கோதா’ என்ற திரைப்படம் நாளை வெளியாக உள்ளது. 50 கோடி ரூபாய் செலவில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த படம் மிகப்பெரிய வரவேற்பை பெரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

துல்கர் சல்மான், பிரசன்னா, ஐஸ்வர்யா லட்சுமி, அனிகா சுரேந்திரன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகிய இந்த படம் துல்கர் சல்மானுக்கு ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த படத்தில் ஏற்கனவே ரித்திகா சிங் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ள நிலையில் தற்போது வெளியான தகவலின்படி துருவ் விக்ரம் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளதாக கூறப்படுகிறது. இது எந்த அளவுக்கு உண்மை என்பதை நாளை படம் பார்த்து தெரிந்து கொள்வோம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.