close
Choose your channels
Por
Joshwa

விறுவிறுப்பாக நடைபெறும் 'துருவ நட்சத்திரம்' பிசினஸ்: படக்குழுவினர் மகிழ்ச்சி..!

Thursday, November 9, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விக்ரம் நடிப்பில், கெளதம் மேனன் இயக்கத்தில் உருவான ’துருவ நட்சத்திரம்’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி சமீபத்தில் அறிவிக்கப்பட்ட நிலையில் இந்த படத்தில் ஏராளமாக பிரச்சனை இருந்ததாகவும் தற்போது அனைத்து பிரச்சனைகளும் தீர்க்கப்பட்டு விட்டதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன.

இந்த நிலையில் துருவ நட்சத்திரம்’ படத்தின் ரிலீஸ் தேதி நவம்பர் 23ஆம் தேதி என அறிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து இந்த படத்தின் பிசினஸ் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

முதல் கட்டமாக இந்த படத்தின் ஓடிடி ரிலீஸ் உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனம் மிகப்பெரிய தொகைக்கு வாங்கி இருப்பதாக கூறப்படுகிறது. இதனை அடுத்து தமிழ்நாடு திரையரங்குகள் ரிலீஸ் உரிமை உட்பட மற்ற ரிலீஸ் உரிமையின் வியாபாரமும் விறுவிறுப்பாக நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மொத்தத்தில் நீண்ட காலமாக தாமதமாகி இருந்த துருவ நட்சத்திரம்’ திரைப்படத்திற்கு தற்போது விடிவு காலம் வந்ததை அடுத்து படக்குழுவினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்

கௌதம் மேனனின் ஸ்டைலிஷ் ஆக்சன் படமாக உருவாகி இருக்கும் இந்த படத்தில் விக்ரம், ரிது வர்மா, ஐஸ்வர்யா ராஜேஷ், பார்த்திபன், சிம்ரன், திவ்யதர்ஷினி, விநாயகன், அர்ஜுன் தாஸ், ராதிகா சரத்குமார், வம்சி கிருஷ்ணா உள்பட பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.