நடிக்க வருகிறார் தல தோனி.. ரஜினியின் 'தலைவர் 170' படத்துடன் கனெக்சன்..!


Send us your feedback to audioarticles@vaarta.com


தல தோனியின் ஸ்டைலிஷான ஹேர் ஸ்டைல் கொண்ட புகைப்படம் கடந்த இரண்டு நாட்களாக இணையதளங்களில் வைரல் ஆகி வரும் நிலையில் அவர் நடிக்க வருவது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவின் பிரபலமான ஹேர் ஸ்டைலிஸ்ட் ஆலிம் ஹக்கீம் என்பவர் தனது சமூக வலைத்தளத்தில் தோனிக்கு தான் ஹேர் ஸ்டைலிஷ் செய்ததாக பதிவு செய்துள்ளார். தோனி ஒரு விளம்பர படத்தில் நடிக்க இருப்பதாகவும் அதற்காகத்தான் இந்த ஹேர் ஸ்டைல் செய்ததாகவும் அவர் பதிவு செய்துள்ளார். மேலும் தோனி ஸ்டைலிஸாக இருக்கும் புகைப்படங்களையும் அவர் பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படம் வைரலாக வருகிறது.
இதே ஆலிம் ஹக்கீம் தான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க இருக்கும் ’தலைவர் 170’ படத்தில் ஹேர் ஸ்டைல் ஆக பணிபுரிந்து வருகிறார் என்பதும் ரஜினியின் ஹேர் ஸ்டைலிஸ்ட் பணிகளை இவர்தான் கவனித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இன்று வெளியாகியுள்ள ‘தலைவர் 170’ படத்தின் ரஜினியின் கெட்டப்பில் ஹேர் ஸ்டைல் செய்தது இவர் தான் என்பது குறிப்பிடத்தக்கது.
Yesssss!!! it’s our King Mahendra Singh Dhoni @msdhoni 👑🏏🔥
— Aalim Hakim (@AalimHakim) October 3, 2023
Really enjoyed creating this hairstyle with all new texture and colour for Mahi bhai.. Sharing some pics which I clicked before he went to give a shot for an ad film 🎥@AalimHakim pic.twitter.com/XSlF9Yi8kw
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments