close
Choose your channels
Don
Nenjukku Needhi

வெற்றிமாறனின் 'விடுதலை' படத்தில் தனுஷ்: ஆச்சரிய தகவல்

Friday, October 29, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகிவரும் ‘விடுதலை’ படத்தில் தனுஷ் பணிபுரிந்துள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகிவரும் ‘விடுதலை’ என்ற படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை நெருங்கி உள்ளது என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஒரு சில நாட்களில் முடிந்துவிடும் என்றும் கூறப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் வெற்றிமாறன் முதல் முறையாக இசைஞானி இளையராஜா அவர்களுடன் இணைந்துள்ளார் என்பதும் இந்த படத்திற்காக இசைஞானி மூன்று பாடல்களை கம்போஸ் செய்திருப்பதாக ஏற்கனவே செய்திகள் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ‘விடுதலை’ படத்தின் ஒரு பாடலை தனுஷ் பாடி உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. இசைஞானியின் தீவிர ரசிகரான தனுஷ் முதல்முறையாக இசைஞானியின் இசையில் பாடி இருப்பது ரசிகர்களுக்கு பெரும் விருந்தாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பாடல் சிங்கிள் பாடலாக விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.