close
Choose your channels
DJ
DJ

'குக் வித் கோமாளி' நடிகை வீட்டில் தனுஷ்-செல்வராகவன்: வைரல் புகைப்படங்கள்!

Thursday, July 28, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

’குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று மூன்றாவது ரன்னர் அப் இடத்தை வென்ற நடிகையின் வீட்டிற்கு தனுஷ் மற்றும் செல்வராகவன் வந்திருந்த புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாக வருகின்றன

சமீபத்தில் முடிவடைந்த குக் வித் கோமாளி சீசன் 3 நிகழ்ச்சியில் மறைந்த நகைச்சுவை நடிகர் தேங்காய் சீனிவாசனின் பேத்தி ஸ்ருதிகா அர்ஜூன் டைட்டில் வின்னர் ஆக வென்றார் என்பது தெரிந்ததே. இதனை அடுத்து இரண்டாவது இடத்தில் தர்ஷன், மூன்றாவது இடத்தில் அம்மு அபிராமி, நான்காவது இடத்தில் வித்யூலேகா ராமன் இடம்பெற்றனர்

இந்த நிலையில் நடிகை வித்யூலேகா ராமன் வீட்டில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் தனுஷ், செல்வராகவன், பிரசன்னா,சினேகா உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியின்போது தனுஷ், செல்வராகவன், சினேகா, பிரச்சன்னாவுடன் எடுத்த புகைப்படங்களை வித்யூலேகா ராமன் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார் என்பதும் இந்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

வித்யூலேகாவின் உறவினரான கீதாஞ்சலி, செல்வராகவனின் மனைவி என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.