close
Choose your channels
sisa

பிரபுதேவாவின் அடுத்த படத்தை புரமோஷன் செய்யும் தனுஷ்!

Wednesday, February 17, 2021 • தமிழ் Comments

பிரபுதேவா நடிப்பில் உருவாக இருக்கும் அடுத்த படத்தை தனுஷ் புரமோஷன் செய்ய உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

’த்ரிஷா இல்லைனா நயன்தாரா’, ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கியவர் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன். இவர் தற்போது இயக்கி வரும் அடுத்த திரைப்படம் ’பாகீரா’. பிரபுதேவா முக்கிய கேரக்டரில் நடிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டு வருகிறது என்பதும் விரைவில் இந்த படம் ரிலீசாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த படத்தின் டீசர் வரும் 19-ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த டீஸரை தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு புரமோஷன் செய்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரபு ஜோடியாக அம்ரியா தஸ்தூர் இந்த படத்தில் நடித்துள்ளார். இவர் ஏற்கனவே தனுஷின் அனேகன் உள்ளிட்ட ஒரு சில படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. செல்வகுமார் ஒளிப்பதிவில் ரூபன் படத்தொகுப்பில் இந்த படம் உருவாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Get Breaking News Alerts From IndiaGlitz