close
Choose your channels

43 வயதில் 2ஆம் திருமணம்.. விண்வெளி வீரரி மணந்த தனுஷ் பட நடிகை..!

Wednesday, February 28, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகர் தனுஷ் உட்பட பல பிரபல நடிகர்களுடன் நடித்த நடிகை ஒருவர் 43 வயதில் இரண்டாவது திருமணம் செய்துள்ளார். அவர் விண்வெளி வீரரை திருமணம் செய்து கொண்டுள்ளதை அடுத்து ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

நடிகர் தனுஷ் நடித்த ’அனேகன்’ திரைப்படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார் நடிகை லீனா. இவர் விக்ரம் நடித்த ’கடாரம் கொண்டான்’ நயன்தாரா நடித்த ’O2' போன்ற தமிழ் படங்களிலும் 70-க்கும் மேற்பட்ட மலையாள படங்களிலும் நடித்துள்ளார்.

இந்த நிலையில் லீனா கடந்த 2004ஆம் ஆண்டு மோகன் குமார் என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில் 2013 ஆம் ஆண்டு கருத்து வேறுபாடு காரணமாக அவரிடம் விவாகரத்து வாங்கி பிரிந்து விட்டார்.

இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளாக பெற்றோருடன் வசித்து வந்த லீனா தற்போது பிரசாந்த் பாலகிருஷ்ணன் நாயர் என்பவரை திருமணம் செய்து கொண்டுள்ளதாக தனது சமூக வலைதளம் மூலம் அறிவித்துள்ளார். இந்த திருமணம் கடந்த ஜனவரி மாதமே நடந்திருந்தாலும் இப்போதுதான் அவர் திருமண அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

லீனாவின் கணவர் பிரசாந்த் ஒரு விண்வெளி வீரர் என்பதும், சமீபத்தில் அவர் பிரதமர் மோடியால் பாராட்டப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து லீனாவுக்கும் அவருடைய கணவருக்கும் ரசிகர்கள் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். மேலும் கணவருடன் இணைந்து இருக்கும் வீடியோவை அவர் வெளியிட்ட நிலையில் அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.