close
Choose your channels
aranmanai

தனுஷ் படத்தில் நடித்த நடிகர் தற்போது டிரைவரா? வைரல் புகைப்படங்கள்..!

Wednesday, June 7, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தனுஷ் நடிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் உருவான 'காதல் கொண்டேன்’ என்ற திரைப்படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்த நடிகர் தற்போது டிரைவராக இருப்பது போன்ற புகைப்படங்கள் வைரல் ஆகி வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தனுஷ் நடித்த ’காதல் கொண்டேன்’ என்ற திரைப்படத்தில் நடிகை சோனியா அகர்வால் அறிமுகமானார் என்பது தெரிந்ததே. இந்த படத்தின் வெற்றியால் அவர் விஜய் உள்பட பல முன்னணி நடிகர்களின் படங்களில் நாயகியாக நடித்தார்.

ஆனால் அதே படத்தில் தான் நடிகர் சுதீப் என்பவர் அறிமுகம் ஆனார். இவர் ஆதி கேசவன் என்ற கேரக்டரில் இந்த படத்தின் இரண்டாவது ஹீரோவாக நடித்திருந்தார் என்பதும் தனுஷுக்கு இணையாக இவரது கேரக்டர் அமைக்கப்பட்டு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த படத்தை அடுத்து சுதீப் ஒரு தமிழ், பெங்காலி, இந்தி படங்களில் நடித்தார் என்பதும், ஒரு சில தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்த நிலையில் தற்போது அவர் டிரைவர் உடையில் இருக்கும் புகைப்படங்கள் இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது. இதனை அடுத்து சுதீப் டிரைவர் பணியில் இருக்கிறாரா என்ற கேள்வி ரசிகர்கள் எழுப்பி வருகின்றனர்.

இந்த நிலையில் இந்த புகைப்படத்தை தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ள சுதீப், இது ஒரு வங்கி விளம்பர படத்திற்கு எடுக்கப்பட்டது என்றும், இதன் படப்பிடிப்பின்போது தனக்கு மகிழ்ச்சியான அனுபவங்கள் ஏற்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Login to post comment
Cancel
Comment