close
Choose your channels

தனுஷின் சூப்பர்ஹிட் பட இயக்குனரின் தந்தை காலமானார்: திரையுலகினர் இரங்கல்

Sunday, July 5, 2020 • தமிழ் Comments

தனுஷ், அமலாபால் நடிப்பில் கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ’வேலையில்லா பட்டதாரி’. இந்தப் படம் மிகப் பெரிய அளவில் சூப்பர் ஹிட் ஆனது என்பதும் என்பதும் சுமார் 6 கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த படம் ரூ.100 கோடிக்கு மேல் வசூல் ஆனது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த படத்தை இயக்கியவர் பிரபல ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இயக்குனர் மற்றும் ஒளிப்பதிவாளர் வேல்ராஜின் தந்தை எஸ்.ராஜாமணி அவர்கள் இன்று காலமானதாக செய்திகள் வெளியாகியுள்ளது. மதுரை கூத்தியார்குண்டு என்ற பகுதியை சேர்ந்தவரான இவர் 99 வயது உடையவர் என்பதும் வயது மூப்பு காரணமாக இன்று மதியம் 1.45 மணி அளவில் காலமானார் என்றும் செய்திகள் வெளியாகி உள்ளது.

இயக்குனர் ஆர்.வேல்ராஜ் தந்தை காலமான செய்தி அறிந்த கோலிவுட் திரையுலகினர் அவருக்கும் அவரது குடும்பத்தினர்களுக்கும் ஆறுதல் கூறி வருகின்றனர். இயக்குனர் வேல்ராஜின் தந்தை எஸ் ராஜாமணி அவர்களின் இறுதிச் சடங்கு நாளை நடைபெறும் என்று கூறப்படுகிறது.

Get Breaking News Alerts From IndiaGlitz