close
Choose your channels
PKK

தனுஷின் அடுத்த பட ரிலீஸ் குறித்த தகவல்!

Friday, March 18, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தனுஷ் நடித்த ’மாறன்’ திரைப்படம் சமீபத்தில் ஹாட்ஸ்டார் ஓடிடியில் ரிலீஸ் ஆனது என்பதும் இந்த படத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்தன என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் தற்போது தனுஷின் அடுத்த படத்தின் ரிலீஸ் குறித்த தகவல் கசிந்துள்ளது.

தனுஷ் நடிப்பில் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ’திருச்சிற்றம்பலம்’. இந்த படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது .

இந்த நிலையில் இந்த படம் ஜூலை மாதம் ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டு இருப்பதாகவும் குறிப்பாக ஜூலை 1ஆம் தேதி ரிலீஸாகும் என்று கூறப்படுவதால் தனுஷ் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ‘மாறன்’ திரைப்படம் ரசிகர்களை ஏமாற்றிய நிலையில் ’திருச்சிற்றம்பலம்’ ரசிகர்களுக்கு திருப்தியை அளிக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம் .

தனுஷ், ராஷி கண்ணா, நித்யாமேனன், பிரியா பவானி சங்கர்,பாரதிராஜா, பிரகாஷ்ராஜ் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவில் பிரசன்னா படத்தொகுப்பில் இந்த படம் உருவாகியுள்ளது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.