close
Choose your channels
enpt
nd2

தனுஷின் 'பட்டாஸ்' படத்தின் ஆச்சரியமான ரிலீஸ் தேதி!

Saturday, December 14, 2019 • தமிழ் Comments

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’தர்பார்’ திரைப்படம் வரும் பொங்கல்’விருந்தாக திரைக்கு வெளியாக உள்ளது. இதனையடுத்து தனுஷ் நடித்த ’பட்டாஸ்’ திரைப்படம் ஒரு வாரம் அல்லது இரண்டு வாரங்கள் கழித்து வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது

இந்த நிலையில் இன்று ’பட்டாஸ்’ திரைப்படத்தின் அதிகாரபூர்வ ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்ட இருப்பதாக இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனமான சத்யஜோதி நிறுவனம் ஏற்கனவே அறிவித்து இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் ’பட்டாஸ்’ படத்தின் ரிலீஸ் தேதி குறித்த மோஷன் போஸ்டர் சற்று முன் வெளியாகியது

இதன்படி ’பட்டாஸ்’ திரைப்படம் ஜனவரி 16ஆம் தேதி வெளியாகும் என்று ஒரு ஆச்சரிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதனால் ரஜினியின் தர்பார் மற்றும் தனுஷின் ’பட்டாஸ்’ ஆகிய இரண்டு படங்களும் பொங்கல் விருந்தாக வெளியாக இருப்பது தெரிகிறது

இருப்பினும் ரஜினியின் தர்பார் திரைப்படம் ஜனவரி 10ஆம் தேதி வெளியாக வாய்ப்பு இருப்பதாகவும் அதன் பின்னர் ஆறு நாட்கள் கழித்தே தனுஷின் ’பட்டாஸ்’ படம் வெளியாக உள்ளதாகவும் கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன

Get Breaking News Alerts From IndiaGlitz