close
Choose your channels

தனுஷின் 'குபேரா' படத்தில் நாகார்ஜூனா கேரக்டர் இதுவா? மாஸ் வீடியோ ரிலீஸ்..!

Friday, May 3, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தனுஷ் நடித்து வரும் ’குபேரா’ என்ற படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் இந்த படத்தில் நாகார்ஜுனா ஒரு முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார் என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் அவரது கேரக்டர் குறித்த வீடியோ வெளியாகி உள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

தனுஷ், ராஷ்மிகா மந்தனா நடிப்பில், சேகர் கம்முலா இயக்கத்தில், தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் உருவாகி வரும் திரைப்படம் ’குபேரா’. இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில வாரங்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என ஐந்து மொழிகளில் உருவாகி வரும் நிலையில் இந்த படத்தின் ஒரு முக்கிய கேரக்டரில் நாகார்ஜுனா நடித்து வருகிறார் என்பதும் அவரது கேரக்டரின் படப்பிடிப்பு நடந்து வருகிறது என்று செய்திகள் வெளியாகி உள்ளன.

இந்த நிலையில் நடிகர் நாகார்ஜுனா தனது சமூக வலைதள பக்கத்தில் ’குபேரா’ படத்தின் 50 வினாடி வீடியோவை வெளியிட்டுள்ள நிலையில் அதில் நடித்து இருக்கும் காட்சிகள் அசத்தலாக இருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். கட்டு கட்டாக பணம் இருக்கும் ஒரு இடத்தில் மழையில் குடை பிடித்துக் கொண்டு நிற்கும் நாகார்ஜுனா, அந்த பணம் அருகே தனது பாக்கெட்டில் இருந்து எடுத்து ஒரு 500 ரூபாய் நோட்டை வைக்கும் காட்சி இந்த வீடியோவில் உள்ளன.

இந்த நிலையில் இந்த படத்தில் நடிகர் நாகார்ஜுனா துப்பறிவும் விசாரணை அதிகாரியாக நடித்து வருவதாக கூறப்படுகிறது. ஏற்கனவே இந்த படத்தில் பிச்சைக்காரராக இருந்து ஒரு டான் ஆக மாறும் கேரக்டரில் தனுஷ் நடித்து வருவதாக கூறப்பட்டது என்பது தெரிந்தது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
Login to post comment
Cancel
Comment