close
Choose your channels
Rocketry
Yaanai

தனுஷின் 'D44' படத்தில் இரண்டு முன்னணி நாயகிகள் இவர்களா?

Sunday, August 1, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தனுஷ் நடித்து வரும் 43வது திரைப்படமான ’மாறன்’ படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும், கார்த்திக் நரேன் இயக்கி வரும் இந்த படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் விரைவில் தனுஷின் 44வது திரைப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற உள்ளது. மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் உருவாக உள்ள இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஏற்கனவே தனுஷ் நடித்த ’குட்டி’ ’யாரடி நீ மோகினி’ மற்றும் ’உத்தமபுத்திரன்’ ஆகிய படங்களை இயக்கிய மித்ரன் ஜவஹர் மீண்டும் தனுஷ் உடன் இணைகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ‘D44' படத்தில் இரண்டு நாயகிகள் என்றும் அவர்கள் ராஷி கண்ணா மற்றும் பிரியா பவானிசங்கர் என்றும் தகவல்கள் வந்துள்ளன. இருவருமே தனுஷுடன் முதல்முறையாக ஜோடி சேர உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகும் இந்த படத்திற்கு படத்தில் நீண்ட இடைவெளிக்குப் பின்னர் அனிருத் இணைகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. ஐந்து ஆண்டுகளுக்குப் பின் தனுஷ் மற்றும் அனிருத் இந்த படத்தின் மூலம் இணைவதால் இந்த படத்தின் எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.