close
Choose your channels
LoveToday
CWK

தனுஷின் அடுத்த படத்தின் டிரைலர் நாளை ரிலீஸ்: அதிரடி அறிவிப்பு

Tuesday, November 23, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான தனுஷ் தற்போது கார்த்திக் நரேன் இயக்கி முடித்துள்ள ’மாறன்’ மற்றும் ஜவஹர் மித்ரன் இயக்கத்தில் உருவாகிவரும் ’திருச்சிற்றம்பலம்’ ஆகிய படத்தில் நடித்துள்ளார். மேலும் செல்வராகவன் இயக்கத்தில் உருவாக உள்ள ’நானே வருவேன்’ என்ற திரைப்படத்தில் நடிக்க உள்ளார் என்பதும் அவர் நடித்து முடித்துள்ள ஹாலிவுட் திரைப்படமான ’தி க்ரே மேன்’ என்ற திரைப்படம் விரைவில் ரிலீசாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் பிரபல பாலிவுட் இயக்குனர் ஆனந்த் எல் ராய் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘அட்ராங்கி ரே’ என்ற திரைப்படத்திலும் தனுஷ் நடித்து முடித்துள்ளார் என்பதும் இந்த படம் ஹாட்ஸ்டாரில் வெளியாக உள்ளது என சமீபத்தில் அறிவிக்கப்பட்டது என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் ‘அட்ராங்கி ரே’ என்ற திரைப்படத்தின் டிரைலர் நாளை ரிலீஸ் ஆக உள்ளதாக தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்து உள்ளார். இதனையடுத்து அவரது ரசிகர்கள் இந்த படத்தின் டிரைலரை மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தனுஷ், சாரா அலிகான், அக்சயகுமார் உள்பட பலரது நடிப்பில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு இசைப்புயல் ஏஆர் ரகுமான் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் வரும் டிசம்பர் 24ஆம் தேதி கிறிஸ்துமஸ் விருந்தாக ஹாட்ஸ்டாரில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.