close
Choose your channels
Don
Nenjukku Needhi

தனுஷ்-செல்வராகவனின் 'நானே வருவேன்' படத்தின் சூப்பர் அப்டேட்!

Saturday, December 4, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தனுஷ் நடிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் உருவாகி வரும் ’நானே வருவேன்’ படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கிய நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த நிலையில் இந்த படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு இம்மாத இறுதியில் தொடங்க இருப்பதாகவும் அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்திற்குள் இந்த படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் முடிந்து விடும் என்றும் சூப்பர் அப்டேட் ஒன்று படக்குழுவினர் தரப்பில் இருந்து வெளிவந்துள்ளது.

தனுஷ் இந்த படத்தில் இரண்டு வேடங்களில் நடித்து வருகிறார் என்பதும் ’பிகில்’ நடிகை இந்துஜா இந்த படத்தின் நாயகியாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. கலைப்புலி எஸ் தாணு தயாரிப்பில் யுவன்ஷங்கர்ராஜா இசையில் உருவாகி வருகிறது.

’துள்ளுவதோ இளமை’ ’காதல் கொண்டேன்’ ’புதுப்பேட்டை’ ’மயக்கம் என்ன’ படங்களுக்குப் பின் தனுஷ் மற்றும் செல்வராகவன் மீண்டும் இணையும் படம் என்பதால் இந்த படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வரும் பொங்கல் தினத்தில் வெளியாக அதிக வாய்ப்பு இருப்பதாகவும் கோடை விடுமுறையில் இந்த படத்தை வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.