close
Choose your channels
DT
BJP

பிரபல நடிகையுடன் நெருக்கமாக தனுஷ்: 'அண்ணா' என அழைத்ததால் சிரிப்பு!

Monday, July 25, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல நடிகையுடன் நடிகர் தனுஷ் நெருக்கமாக கைகோர்த்து நின்ற போது பத்திரிக்கையாளர்கள் தனுசை ’அண்ணா’ என்று அழைத்த போது அதற்கு அந்த நடிகை சிரித்த வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

தனுஷ் நடித்த ’தி க்ரே மேன்’ என்ற திரைப்படம் கடந்த வெள்ளியன்று வெளியான நிலையில் இந்த படத்தில் பணிபுரிந்த அனைவருக்கும் மும்பையில் பார்ட்டி வைக்கப்பட்டது. இந்த பார்ட்டியில் படக்குழுவினர் மட்டுமின்றி பாலிவுட் திரையுலக பிரபலங்களும் கலந்து கொண்டனர்.

இந்த நிலையில் தனுஷுடன் ‘அட்ராங்கி ரே’ என்ற திரைப்படத்தில் நடித்த நடிகை சாரா அலிகான் இந்த பார்ட்டியில் கலந்துகொண்டார். அவர் தனுஷூடன் கைகோர்த்து பத்திரிகையாளர்களுக்கு போஸ் கொடுத்தார். தனுஷுடன் நெருக்கமாக சாரா அலிகான் நின்றிருந்தபோது புகைப்படக்காரர்கள் புகைப்படம் மற்றும் வீடியோக்களை எடுத்தனர்.

அப்போது பத்திரிகையாளர்கள் சிலர் தனுஷை ‘அண்ணா’ என்று அழைத்த போது சாரா அலிகான், ‘உங்களை ஏன் அண்ணா என்று அழைக்கிறார்கள்’ என்று கேட்டார். அதற்கு தனுஷ் ’எனக்கு தெரியவில்லை’ என்று கூறினார். இந்த வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.