close
Choose your channels

போலீஸ் வேடத்தில் நடிக்கும் சூப்பர் ஸ்டாரின் மகள்

Tuesday, October 13, 2015 • தமிழ் Comments

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் 'கபாலி' படத்தில் அவருடைய மகளாக நடித்து வரும் நடிகை தன்ஷிகா. இந்த படத்தில் தன்ஷிகா போதைக்கு அடிமையாக நடித்திருப்பதாகவும், சமீபத்தில் சென்னை விமான நிலையத்தில் நடைபெற்ற படப்பிடிப்பில் இருந்தபோதும் இருவரும் கலந்து கொண்டதாகவும் செய்திகள் வெளியாகின. இந்த படம் தன்ஷிகாவுக்கு நல்ல திருப்புமுனையை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் தன்ஷிகா நடித்து வரும் மற்றொரு படமான 'காத்தாடி' என்ற படத்தில் அவர் போலீஸ் வேடத்தில் நடிப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இயக்குனர் கல்யாண் இயக்கி வரும் இந்த படத்தில் தன்ஷிகா போலீஸ் வேடத்தில் நடிப்பதோடு ஆக்சன் காட்சிகளிலும் நடித்துள்ளார். தன்ஷிகா நிஜ வாழ்க்கையில் தற்காப்புக்கலையை பயின்றுள்ளதால் ஆக்சன் காட்சிகளில் டூப் இன்றி பல ரிஸ்க்கான காட்சிகளில் நடித்ததாக கூறப்படுகிறது.

தன்ஷிகா, கார்த்திக், டேனியல், காளி, பேபி சந்தியா, மற்றும் பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர். சமீபத்தில் மறைந்த பழம்பெரும் நடிகர் வி.எஸ்.ராகவன் நடித்த கடைசி படம் 'காத்தாடி' என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்திற்கு பவன் என்பவர் இசையமைக்கின்றார்.

Get Breaking News Alerts From IndiaGlitz