close
Choose your channels
siren
lal_salaam

தேவதர்ஷினியின் மகளா இவர்?  ஆச்சரியத்தில் வாயைப்பிளக்கும் ரசிகர்கள்!

Friday, September 16, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ் சினிமாவின் நகைச்சுவை மற்றும் குணசித்திர நடிகையான தேவதர்ஷினி மகள் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகும் நிலையில் அவரது லேட்டஸ்ட் புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் ஆச்சரியத்தில் வாய்பிளந்து உள்ளனர்.

கடந்த 2006ஆம் ஆண்டு முதல் பல திரைப்படங்களில் நடிகை தேவதர்ஷினி நடித்து வருகிறார் என்பதும் விஜய் டிவியில் உள்ள ஒருசில நிகழ்ச்சிகளுக்கு நடுவராக இருந்து வருகிறார் என்பதும் தெரிந்ததே. தேவதர்ஷினியின் காமெடி நடிப்புக்கு என ஏராளமான ரசிகர்கள் உள்ளார்கள்.

இந்த நிலையில் தேவதர்ஷினி கடந்த 2002ஆம் ஆண்டு சேட்டன் என்பவரை திருமணம் செய்துகொண்ட நிலையில் இந்த தம்பதிக்கு நியாதி என்ற மகள் உள்ளார். விஜய்சேதுபதி, த்ரிஷா நடித்த ’96’ திரைப்படத்தில் இவர் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் விஜய் நடித்த ’பிகில்’ திரைப்படத்தில் கால்பந்து வீராங்கனைகளில் ஒருவராக நடிக்க இவருக்கு வாய்ப்பு கிடைத்தது என்பதும் ஆனால் அவர் பத்தாம் வகுப்பு பரீட்சை எழுத வேண்டிய நிலை இருந்ததால் அந்த படத்தில் நடிக்க முடியாமல் போனது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சமீபத்தில் தனது மகளின் போட்டோஷூட் புகைப்படங்களை தேவதர்ஷினி தனது இன்ஸ்டாவில் வெளியிட்டு உள்ள நிலையில் அந்த புகைப்படங்களைப் பார்க்கும் போது அவர் ஹீரோயினுக்கு தயாராகி விட்டது போன்று தெரிகிறது என நெட்டிசன்கள் கமெண்ட் செய்துவருகின்றனர். ரசிகர்களை வாய்பிளக்க வைக்கும் அளவுக்கு அட்டகாசமாக இருக்கும் இந்த புகைப்படங்கள் தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.