close
Choose your channels

பிரபல இயக்குனரின் அடுத்த படத்தில் இணைந்த டிடி: எந்த கேரக்டரில் தெரியுமா?

Sunday, February 27, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விஜய் டிவி பிரபலமான டிடி என்கிற திவ்யதர்ஷினி ஏற்கனவே சில படங்களில் நடித்துள்ள நிலையில் தற்போது பிரபல இயக்குனரின் அடுத்த படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளதாக அறிவித்துள்ளார்.

விஜய் டிவியின் பிரபல தொகுப்பாளினி திவ்யதர்ஷினி ஏற்கனவே விசில், சரோஜா, பவர்பாண்டி, சர்வம் தாள மையம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். மேலும் தற்போது அவர் ’துருவ நட்சத்திரம்’, ’ஜோஸ்வா இமைபோல் காக்க’ போன்ற படங்களில் நடித்து வரும் நிலையில் சுந்தர்சி இயக்கத்தில் உருவாகும் அடுத்த திரைப்படத்தில் டிடி நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

ஜீவா, ஜெய் மற்றும் ஸ்ரீகாந்த் ஆகிய மூவர் ஹீரோவாகவும் ரைசா வில்சன், அமிர்தா ஐயர் மற்றும் ஐஸ்வர்யா தத்தா ஹீரோயின்களாகவும் நடிக்கும் படத்தில் தங்கை கேரக்டரில் டிடி நடிப்பதாகவும் இந்த கேரக்டர் படத்தின் திருப்புமுனைக்குரியது என்றும் அவர் தெரிவித்துள்ளார் .

கடந்த நவம்பர் மாதமே இந்த படத்தில் நடிக்க தனக்கு வாய்ப்பு வந்ததாகவும் சுந்தர் சி மற்றும் குஷ்பு ஆகிய இருவருமே தங்கள் குடும்பத்தில் ஒருவரை போலவும் என்றும் டிடி தெரிவித்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
Login to post comment
Cancel
Comment