'தேவர் மகன்' பாடலுக்கு மனைவி, குழந்தையுடன் நடனம் ஆடிய பிரபல கிரிக்கெட் வீரர்
கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக இந்தியா மட்டுமின்றி உலகெங்கிலும் உள்ள சுமார் 200 நாடுகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் ஊரடங்கு உத்தரவு காரணமாக கிடைத்த விடுமுறையில் வேலையின்றி வீட்டில் இருக்கும் திரை நட்சத்திரங்கள் மற்றும் விளையாட்டு நட்சத்திரங்கள் தங்களது சமூக வலைதளங்களில் அவ்வப்போது வேடிக்கையான, வினோதமான, நகைச்சுவையான வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர் என்பது தெரிந்ததே.
அந்த வகையில் பிரபல ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் அவ்வப்போது தனது சமூக வலைத்தளத்தில் வெளியிடும் வீடியோக்கள் அவரது ரசிகர்களால் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் சற்று முன்னர் அவர் கமலஹாசன் நடித்த ’தேவர் மகன்’ படத்தில் இடம்பெற்ற ’இஞ்சி இடுப்பழகி’ என்ற பாடலுக்கு மனைவி மற்றும் குழந்தையுடன் நடனமாடிய வீடியோவை பதிவு செய்துள்ளார். இந்த வீடியோ தற்போது இணைய தளங்கள் முழுவதும் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
ஒரு தமிழ் திரைப்பட பாடலுக்கு ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஒருவர் நடனமாடி இருப்பது தமிழ் திரைப்பட உலகிற்கு கிடைத்த பெருமையாகக் கருதப்படுகிறது.